News
ஆசிரியர் மற்றும் அதிபர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்..

தற்போதைய அரசாங்கம் சுபோதனி அறிக்கையை மறந்து ஆசிரியர்களை ஏமாற்றி எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்- அதிபர் சம்பளத்தை பிற்போடுவதற்கு எதிராக எதிர்காலத்தில் பாரிய போராட்டமொன்றை நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் திரு.பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதன்படி, எதிர்காலத்தில் சம்பளப் பிரச்சினையை தீர்க்குமாறு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் கோரியுள்ளனர்.
அதிபர் மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றும் தார்மீக உரிமை அரசுக்கு இனி இல்லை. எனவே, எதிர்காலத்தில் சம்பள நெருக்கடிக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுமோம் என பிரதி தலைவர் மேலும் தெரிவித்தார்.



