News

செவிலியர் பராமரிப்பு சேவைக்காக இஸ்ரேல் செல்லும் மற்றுமொரு குழு

வீட்டு செவிலியர் பராமரிப்பு சேவைக்காக இஸ்ரேல் நோக்கி புறப்படும் 126வது குழுவின் 19 பேருக்கு வவிமான பயணச் சீட்டுக்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நேற்று (31) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இடம்பெற்றது.

இந்த குழு இம்மாதம் 4ஆம் திகதி இஸ்ரேல் நாட்டிற்கு புறப்பட உள்ளது.

அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி இலங்கையிலிருந்து இஸ்ரேல் செல்லவுள்ள இக்குழுவினருடன் இந்த வருடம் 693 பேர் செவிலியர் பராமரிப்பு பணிக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டிற்கு இலங்கைத் தொழிலாளர்களை தொழிலுக்கு அனுப்பும் இவ்வேலைத்திட்டத்திற்கு அமையஇ இதுவரையிலும் இலங்கையிலிருந்து 1,527 பேர் செவிலியர் பராமரிப்பு சேவைக்காக இஸ்ரேல் சென்றுள்ளனர்.

இந்நிகழ்வில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஹில்மி அஸீஸ் மற்றும் பணியகத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Recent Articles

Back to top button