News
வடக்கு, கிழக்கு இளைஞர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அக்கறையாக இருக்கிறது ; நாமல்
வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் இளைஞர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அக்கறையாக இருப்பதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இப்போதும் தமிழ் சமூகத்தில் உள்ள இளவயதினருடன் தனது கட்சி நெருங்கிச் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்