ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு வெளியிட்டதால் விசா ரத்து: அமெரிக்காவில் இருந்து தாமாக முன்வந்து வெளியேறிய இந்திய மாணவி

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததால், இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்ததுள்ள சம்பவம் நடந்துள்ளது.
இதனையடுத்து அந்த மாணவி தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் ரஞ்சனி ஸ்ரீனிவாசன்.இவர் எப்1 மாணவர் விசா பெற்று அமெரிக்கா, கொலம்பியா பல்கலையில் நகர்ப்புற திட்டமிடலில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார்.இவர், இஸ்ரேல் தாக்குதலை கண்டித்தும், ஹமாஸ் அமைப்புக்கும் எதிரான போராட்டத்திலும் பங்கேற்றார். ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்து உள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக ரஞ்சனி ஸ்ரீனிவாசன் செயல்பட்டு வந்ததால், அவரது விசாவை அமெரிக்கா அரசு ரத்து செய்தது. இதனையடுத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அவர், தாமாக முன்வந்து அமெரிக்காவில் வெளியேறினார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அமெரிக்கா அரசின் செயலியிலும் அதனை ரஞ்சனி ஸ்ரீனிவாசன் பதிவு செய்துள்ளார்.
அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை, அந்நாட்டு அரசு கைது செய்து கை விலங்கு போட்டு சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கிறது. இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்திய மாணவி தாமாக முன்வந்து வெளியேறி உள்ளார்.

