News
ஈஸ்டர் தாக்குதலுக்கு இரண்டு மூன்று மாதங்களில் நீதியை பெற்றுக்கொடுக்க முடியாது… அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னரே அதனை புரிந்துகொண்டோம்…- அமைச்சர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரிரு மாதங்களில் நீதியை பெற்றுக்கொடுக்க முடியாது என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரிரு மாதங்களில் நீதி கிடைக்காது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் இந்த உண்மையை உணர்ந்தோம். இருந்தாலும், இந்த மாதம் ஏதாவது செய்ய முயற்சிப்போம்.’
வரவு செலவுத் திட்டம் மீதான குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகம் உட்பட எவராலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

