News

ஈச்சம்பழம் வழங்க மறுத்த மௌலவி மீது தாக்குதல்

பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட ஒருவர், தனக்கு ஈச்சம்பழம் வழங்க மறுத்ததால் கோபமடைந்து மௌலவியைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள மொஹிதீன் ஜும்மா பள்ளிவாயலின் மௌலவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. .

ஈச்சம்பழம் வழங்காமை தொடர்பில், சந்தேகநபர், மௌலவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான மௌலவி களுத்துறையில் உள்ள நாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சந்தேக நபர் களுத்துறை கட்டுகுருந்த பகுதியில் உள்ள சிறிய பள்ளிவாசலில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் அப்பகுதியை விட்டு வெளியேறி விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recent Articles

Back to top button