கொழும்பு மாநகர சபையில் எமக்கு எந்த சவாலும் இல்லை ; கொழும்பு மாநகர சபை SJB வேட்பாளர் மொஹமட் பாfபிக் ..

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமது கட்சிக்கு எந்த சவாலும் இல்லை என கொழும்பு மாநகர சபை மசங்கஸ்வீதிய வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர் மொஹமட் பாfபிக் குறிப்பிட்டார்.
நடைமுறைக்கு சாத்தியமில்லாத பொய் வாக்குறுதிகளை நம்பி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து விட்டு கைசேதப்பட்டுள்ள மக்கள் இந்த தேர்தலில் அரசுக்கு சிறந்த ஒரு செய்தியை கூறத் தயாராக உள்ளார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட அவர்,
ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்த அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. அத்தியாவசிய பொருட்களுக்கான வெட் வரியை முதலாவது வரவு செலவு திட்டத்திலேயே குறைப்பதாக கூறினார்கள். திருடர்களை பிடிப்பதாக கூறினார்கள்.முன்னாள் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்த பணத்தை மீட்பதாக கூறினார்கள்.41 பில்லியன் டொலர் கடனெல்லம் ஒரு கடனா ? அது ஒரு சப்பை மேட்டர் எனக்கூறி அதிகாரத்திற்க்கு வந்த ஆட்சியாளர்கள் இன்று IMF இன் தலையாட்டி பொம்மைகளாக மாறியுள்ளார்.
அமைச்சர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை நீக்கியதை தவிர இந்த அரசு கடந்த 6 மாதங்களில் உருப்படியாக வேறு எதையும் செய்யவில்லை.
படித்தவர்களை பாராளுமன்ற அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டதை நாம் கண்டோம்.இந்த உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு மேயர் வேட்பாளராக வைத்தியர் ருவைஸ் ஹனீபா அவர்களால் நாம் களமிறக்கியுள்ளோம்.அவர் படித்தவர் மட்டுமால்லாமல் முன்னாள் சபாநாயகர் எம் எச் முஹம்மத் அவர்களின் பேரனுமவார். சிறந்த குடும்ப பின்னனியில் வந்த கல்விமானான ருவைஸ் ஹனீபா பொது மற்றும் நிர்வாக துறைகளில் பல வருட அனுபவம் கொண்டவர் என கூறினார்.



