News
பாராளுமன்றில் இடம்பெற்ற மேசைப்பந்து போட்டியில் சாம்பியனான கொட்டாச்சி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் வருடாந்தம் நடாத்தப்படும் விளையாட்டுப் போட்டியில் மேசைப்பந்து போட்டியின் சம்பியன் பட்டத்தை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி நிலாந்தி கொட்டாச்சி வென்றுள்ளார்.
பிரதி அமைச்சர் திரு.சதுரங்க அபேசிங்கவுடன் இரட்டையர் போட்டியில் கலந்து கொண்டு அங்கும் சம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்த போட்டியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதமர் ஹரினி அமரசூரிய, சபையின் சபாநாயகர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் தலைமையில் இடம்பெற்றது.

