வண்ணாத்திப்பூச்சியின் வெற்றி மக்களின் வெற்றியாகும் ; மிப்ளால் மௌலவி ..

ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பு நாடளாவிய ரீதியில் அஷ்ஷெய்ஹ் அல் ஹாபிழ் மிப்ளாழ் அவர்களின் தலைமையில் அவரின் வழிகாட்டலிலும் நெறிப்படுத்தலின் கீழும் வண்ணாத்திப்பூச்சி சின்னத்தில் 8 சபைகளில் போட்டியிடுகிறது.
தேர்தல் காலங்களில் மட்டுமல்லாது எல்லாக் காலங்களிலும் மக்களோடு மக்களாக களத்தில் நின்று சமூகப் பணி செய்யும் பல சமூக சேவகர்களை துடிப்பான சமூக உணர்வு கொண்ட இளைஞர்கள் படித்தவர்கள் உலமாக்கள் என பலரை இனங்கண்டு பொருத்தமானவர்களை வேட்பாளர்களாக ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பு களமிறக்கியிருக்கிறது.
ஊழலற்ற உள்ளூராட்சி நிருவாகம் மக்களின் வாழ்வாதார மேம்பாடு சிறார்களின் கல்வி மேம்பாடு ஆதரவற்றவர்களுக்கான அறப்பணிகள் பிரதேச அபிவிருத்தி போதை ஒழிப்பு சுத்தம் சுகாதாரமான பிரதேச மேம்பாடு என பல்வேறு மக்கள் நலப் பணிகளை முன்வைத்து இத்தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு போட்டியிடுகிறது.
புதியதொரு அரசியல் கலாசாரத்திற்கு வித்திடும் ஒரு முன்மாதிரி அரசியல் கலாசாரத்தையும் மக்கள்நேய அரசியலையும் கருத்தியலாகக்கொண்டு இயங்கிவரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மக்களோடு மக்களாக இந்த அரசியல் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு வேட்பாளர்களும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை வெல்ல வைப்பதற்காகவே செயற்படுகின்றனர். ஆனால் வண்ணத்துப்பூச்சி வேட்பாளர்கள் தம்பிரதேச மக்களை வெல்ல வைப்பதற்காக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். வண்ணத்துப்பூச்சியின் வெற்றி மக்களின் வெற்றியாகும்.
சமூகப் பிரச்சினைகளின் போது மக்களோடு மக்களாக இருந்து செயற்பட்டவர்களை மக்களுக்காக வெல்ல வைப்பது காலத்தின் தேவையாகும்.எனவே கட்சி பேதங்களை மறந்து பிரதேச அபிவிருத்திக்காகவும் மக்கள் நலனிற்காகவும் வண்ணத்துப்பூச்சி வேட்பாளர்களை வெல்ல வைக்க அனைவரும் அணி திறலுமாறு அதன் தலைவர் அஷ்ஷெய்ஹ் அல் ஹாபிழ் பிப்ளாழ் அவர்கள் சமூகத்திற்கு திறந்த அழைப்பை விடுக்கின்றார்.
ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பு கடந்த உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகரசபையில் இரண்டு பிரதிநிதிகளைக் கொண்டிருப்பதுடன் தற்போது நடைபெற இருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் வண்ணத்துப்பூச்சி ஒரு பேசுபொருளாக மாறியிருக்கிறது.
பல்லாயிரம் தொண்டர்களைக்கொண்ட ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பு எதிர்வரும் காலங்களில் இலங்கை அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்துக்களில்லை.



