News
அனுரவுக்கு ஆதரவு திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தியவர்கள் குவைத் பொலிஸாரால் கைது !
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் புலம்பெயர்ந்த நாம் அமைப்பின் குவைத் கிளை ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க குவைத் சென்றிருந்தவர்கள் குவைத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கை குவைத் தூதரகத்தின் தலையீட்டினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 26 இலங்கையின் 24 இசைக்கலைஞர்கள் மற்றும் கலைஞர்கள் இருந்ததாக கூறப்படும் அதேவேளை குறித்த 24 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் நிகழ்சி ஏற்பாடு செய்த இருவர் பொலிஸாரால் தடுத்து வைத்துள்ளதாக கூறப்படும் அதேவேளை அவர்கள் அனுமதியின்றி நிகழ்சி ஏற்பாடு செய்தகுற்றத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.