News
சஜித் பிரேமதாசாவுடன் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இணைந்தார்
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ள முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்தார்.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுற்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று ஸ்தாபிக்கபட்டடுள்ளது.
அதன்படி மனோ கணேசன் தலைமையிலான தமிழ் மக்கள் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (தயாசிறி), சுதந்திர மக்கள் சபை, புரவெசி ஹந்த ஆகிய கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து ”ஐக்கிய மக்கள் கூட்டணி” என்ற பெயரில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளன