News

ஹக்கீமை பற்றி நன்றாக அறிந்திருந்தும் முஷாரப் அரசியல் தற்கொலை செய்ய முனைவது வரலாற்று தவறாக அமையும் – ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான்

மாளிகைக்காடு செய்தியாளர்

மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கெடுத்துக்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எல்லோருக்கும் வழங்கும் வாக்குறுதி போன்று இவருக்கும் அடுத்தமுறை எம்.பியாக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நம்பி எவ்வித அதிகாரங்களுமில்லாத பிரதித்தலைவர் பதவியை பெற்றுக்கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையவுள்ளதாக அறிகிறேன். இது முஷாரப் செய்து கொள்ளும் அரசியல் தற்கொலையாகும் என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும், பொய்யான வாக்குறுதிகளையும், ஏமாற்று அரசியலையும் செய்து மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து இறங்குமுகமாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முட்டுக்கொடுக்க முஷாரப் முனைவது பொத்துவில் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் மதிப்பை குறைத்து அரசியல் அனாதையாக எதிர்காலத்தில் அவரை மாற்றிவிடும்.

சர்வதேசளவில் பெயர்பெற்ற பொத்துவில் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க முஸ்லிம் காங்கிரஸ் போன்ற ஏமாற்று பேர்வழிகளிலிருந்து தங்களை விடுவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து 70 சதவீதமான வாக்குகளை வழங்கியது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் இயல்புகளையும், அவரின் நடத்தைகளையும், குணங்களையும் நன்றாக அறிந்து அவரை தோலுரித்த முஷாரப் அவர்கள் இப்போது அவரை நம்பிய மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவே முடியாதவாறு முஷாரப் எடுத்திருக்கும் இந்த முடிவு பொத்துவில் மக்களுக்கு மட்டுமல்ல அந்த மண்ணுக்கு செய்யும் வரலாற்று தவறு என்பதை விரைவில் அவர் உணர்ந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button