News
வாகனத்தின் பெறுமதி என்பது வேறு தற்போதய சந்தை பெறுமதி என்பது வேறு !

ஜனாதிபதி செயலக வாகன டெண்டரில் பாரிய முறைக்கேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹன பண்டார குற்றம் சுமத்தினார்.
வாகனத்தின் பெறுமதி என்பது வேறு தற்போதய சந்தை பெறுமதி என்பது வேறு என கூறிய அவர் சந்தை பெறுமதிக்கு மதீப்பீடு செய்யாமல் வாகன பெறுமதிக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை ஊடாக இந்த மோசடிக்கு வழி சமைக்கப்பட்டதாக கூறினார்.
அரகலவுக்கு பின்னர் அதிகமான தொகையை மதிப்பீடு செய்து இழப்பீடாக பெற்றதாக முன்னாள் உறுப்பினர்களை குற்றம் சுமத்திய அரசாங்கம் அரச வாகனங்களை குறைவாக மதிப்பிட்டு தங்கள் விசுவாசிகளுக்கு விற்பனை செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.



