News
எகிப்து மல்யுத்த வீரர் மொஹமட் ‘கேஷோ’ இப்ராஹிம் பிரான்ஸ் பொலிஸாரால் கைது
26 வயதான எகிப்திய மல்யுத்த வீரர் மொஹமட் ‘கேஷோ’ இப்ராஹிம் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் பாரிஸில் கைது செய்யப்பட்டார்.
நேற்று (09) அதிகாலை 5 மணியளவில் உணவகம் ஒன்றின் முன்னால் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உணவகத்தில் ஒரு பெண்ணின் பின்புறத்தைத் தொட்ட குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றதாக எகிப்திய ஒலிம்பிக் கமிட்டி (EOC) கூறுகிறது.
அவர் நெறிமுறைக் குழுவால் விசாரிக்கப்படுவார் என்றும் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் வாழ்நாள் தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் குழு மேலும் கூறியது.