News

“நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம்”

அமெரிக்கா எங்களுக்கு உதவுகிறது என்றும், ஒவ்வொரு நாளும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பேசுவதாகவும், டிரம்ப் அமெரிக்காவிற்கு எது நல்லது என்பதை முடிவு செய்வார்.எந்த உதவியையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் எனவும் இஸ்ரேலிய பிரதமர் கூறினார்.

தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் ,

அமெரிக்கா இல்லாமல் இஸ்ரேல் ஈரானிய அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியுமா என்று கேட்டதற்கு, இஸ்ரேல் ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தலை அகற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது நாங்கள் அதைச் செய்கிறோம், நாங்கள் அதை விட்டுவிட மாட்டோம்.”

“காசாவில் உள்ள எங்கள் பணயக்கைதிகளை நாங்கள் கைவிட மாட்டோம்,” என்று அவர் மேலும் கூறினார். “அவர்கள் அனைவரையும் நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம்,

இஸ்ரேல் ஈரானின் ஆன்மீக தலைவர் கொமேனியை கொல்ல விரும்புகிறதா என்று கேட்டதற்கு, “எங்கள் போர்த் திட்டங்கள் அனைத்தையும் நான் விவரிக்கப் போவதில்லை… தேவையானதைச் செய்வோம். நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button