News

அமைச்சர் பிரேமலால் ஜயசேகர மொட்டுவுக்கு ஆதரவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்த துறைமுக இராஜாங்க அமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரேமலால் ஜயசேகர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைய தீர்மானித்துள்ளார்.

நாளை (13) காலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளார்.

‘சொக்கா மல்லி’ என அனைவராலும் அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர, பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவை ஆதரிப்பதாக, அவரது பேச்சாளர் நேற்று பிற்பகல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Back to top button