News
சஜித் மீது நான் வைத்துள்ள அன்பு ஒருபோதும் குறையாது !
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.
கங்காராம விகாரையில் அவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அங்கு கருத்து வெளியிட்ட அவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி மேல் தான் வைத்துள்ள அன்பு ஒருபோதும் குறையாது என குறிப்ப்பிட்ட அவர்.
தான் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஜனாதிபதியை ஆதரிக்க தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.