பலஸ்தீனை ஒரு நாடாக அங்கீகரிக்கும் முக்கிய தீர்மானத்தை எடுக்கப் போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் அறிவிப்பு

- By : ஸபர் அஹ்மட்
பலஸ்தீனை ஒரு நாடாக அங்கீகரிக்கும் காத்திர முக்கியத்துமிகு தீர்மானத்தை எடுக்கப் போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் தெரிவித்து இருக்கிறார்.
செப்டம்பரில் நடக்க இருக்கும் ஐ நா சபை கூட்டத் தொடரில் உத்தியோகப்பூர்வமாய் அறிவிக்கப் போவதாய் மெக்ரோன் அறிவித்து இருக்கும் நிலையில் இஸ்ரேலின் அத்தனை பயங்கரத்திற்கும் கொள்கை வகுப்பாளராய் இருந்து கொண்டு காஸா மாபெரும் மனிதப் பேரழிவிற்கு உற்ற துணையாய் இருக்கும் அமெரிக்கா , மெக்ரோனின் இம்முடிவை பொறுப்பற்ற புத்திசாலித்தனமற்ற முடிவு என்று திட்டி இருக்கிறது.
இதுவரை நூற்று நாற்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் பலஸ்தீனை ஒரு தேசமாய் அங்கீகரித்திருக்கும் நிலையில் பொருளாதார – ராணுவ பலமிகு ஐரோப்பா நாடுகள் பலஸ்தீனை அங்கீகரிக்கும் விடயத்தில் தயக்கம் காட்டி வந்தன.
ஆனால் இஸ்ரேல் 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் தொடர்ச்சியாய் மேற்கொண்டு வரும் படுகொலைகளாலும் மனிதகுல விரோத நடவடிக்கைகளாலும் பொறுமை மீறிய நோர்வே- அயர்லாந்து- ஸ்பெய்ன் நாடுகள் 2024ம் ஆண்டு பலஸ்தீனை அங்கீகரிக்கும் வரலாற்றுச் சிறப்புகிகு முடிவை எடுத்தன.
இது பிரான்ஸின் தருணம். பலஸ்தீனர்களிற்கு ,அகதி அந்தஸ்து வழங்க இஸ்ரேல் நடத்திய கொடூரங்கள் போதுமானவை என்று France’s National court of Asylum கடந்த வாரம் வரலாற்றுச் சிறப்புமிகு தீர்ப்பளித்திருக்கும் நிலையில் அடுத்த கட்டமாய் ஜனாதிபதி மெக்ரோனின் தேசமாய் அங்கீகரிக்கும் அறிவிப்பும் இன்று வெளிவந்து இருக்கிறது.


