அரசியலில் நண்பரும் இல்லை எதிரியும் இல்லை.சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணைவார்கள்
“நாம் எமது நோக்கத்தை மக்களிடம் முன்வைப்போம். எனினும் மக்களே அவர்களது முடிவுகளை எடுப்பார்கள்” என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு பொருத்தமான பொருளாதார, சமூக மாற்றங்களை கொண்டுவர பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுன என்பது வெற்றியடையும் அரசியல் கட்சியாகும்.
தொழில் வாய்ப்பு, கைத்தொழிலை பெருக்கி நாட்டிலுள்ள அனைவரையும் பாதுகாக்க முடியுமான பரந்த கூட்டணியாக எமது கட்சி முன்னிலையாகிறது. எமது கட்சிக்குள் மக்கள் மாறவில்லை. மக்களின் பிரதிநிதிகளே மாறுகின்றனர்.
நாம் எமது நோக்கத்தை மக்களிடம் முன்வைப்போம். மக்களே அவர்களது முடிவுகளை எடுப்பர்” என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கது. நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் தேசிய உற்பத்திகளை எம்மால் மாத்திரமே பாதுகாக்க முடியும்.
வெற்றிக்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். அரசியலில் நண்பரும் இல்லை எதிரியும் இல்லை என்பார்கள். ஆகவே எம்மை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணைவரென்றும் தெரிவித்தார்.