News
பொருளாதார நெருக்கடியில் இருந்து ரனில் மீட்டதாக கூறுவது பொய் ; மனோ
இந்தியா வழங்கிய 4 பில்லியன் கடனால் தான் வரிசை யுகம் முடிவுக்கு வந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் குறிப்பிட்டார்.
இன்று ருவன்வெல்ல நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்..
ரனில் விக்ரமசிங்க தான் தான் வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டதாக கூறித்திரிகிறார்.அது அப்பட்டமான பொய்.இந்தியாவே இலங்கைக்கு 4 பில்லியன் சலுகையை வழங்கி இலங்கை மீள உதவியது. இனியும் மக்களிடம் பொய் கூற வேண்டாம் எம ரனில் விக்ரமசிங்கவிடம் நான் கூறுகிறேம் என கூறினார்.