பாடசாலை மாணவிகளை விட மாணவர்களே அதிகளவாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருவதாக விசேட வைத்திய நிபுணர் தெரிவிப்பு. #இலங்கை
நாட்டில் பெரும்பாலான பாடசாலை மாணவிகள் முதலில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவது தங்களது காதலர்களால் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ ஒன்றியத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (19-08-2024) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாடசாலை மாணவிகளைப் போன்று மாணவர்களும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுகின்றனர். பாடசாலை மாணவர்கள் காதலையும் பாலுறவையும் வேறுபடுத்திப் பார்க்கத் தவறியதே இதற்கு முக்கியக் காரணம்.
இந்த நிலையில், பாடசாலை மாணவிகளை விட மாணவர்களே அதிகளவாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருவதாக அவர் பிள்ளைகளின் சதவீதம், துஷ்பிரயோகம் செய்யப்படும் பெண் பிள்ளைகளின் சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.
குடும்பத்தின் மிகவும் பிரியமான பெரியவர்களால் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களின் அறியாமை மற்றும் அச்சத்தின் விளைவாக சிறுவர்கள் நீண்டகாலமாக பலாத்காரத்திற்கு உள்ளாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார அமைச்சகம்; கல்வி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் இது தொடர்பில் உரிய நேரத்தில் வேலைத்திட்டங்களைத் தயாரிக்க வேண்டிய தேவை இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்