News
VIDEO > அவுஸ்திரேலிய துப்பாக்கிச் சூட்டின் போது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை துணிச்சலாகத் பிடித்து சண்டையிட்டு பலரையும் காப்பாற்றிய ஹீரோ அஹ்மத்

அவுஸ்திரேலியாவின் பொண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை துணிச்சலாகத் பிடித்து சண்டையிட்டதன் மூலம், 43 வயதுடைய அகமது எல் அகமது ஒரு வீரராகப் பாராட்டப்படுகிறார்.
இவர் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையும், அங்கு ஒரு பழக்கடை உரிமையாளருமாவார்.
பின்னர், இரண்டாவது துப்பாக்கிதாரியால் அவர் இரண்டு முறை சுடப்பட்டார்,
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யூத சமூகத்தினரைக் குறிவைத்து பாண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர் என்றும், ஒரு குழந்தை உட்பட 29 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. Video https://www.instagram.com/reel/DSP2sGIDFAW/?igsh=Y2c1Z210OXNxdjEy



