News
வெளிநாட்டு பணத்துக்கு அடிமையாகி நாட்டின் கலாசாரத்தை சீரழிக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை !

வெளிநாட்டு பணத்துக்கு அடிமையாகி நாட்டின் கலாசாரத்தை சீரழிக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என பேராயர் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டார்.
பௌத்தம் , இந்து , இஸ்லாம் , கத்தோலிக்கம் என நாட்டில் உள்ள அனைத்து மதங்களாலும் தடுக்கப்பட்ட கலாசார சீரழிவுகளை கல்விச்சீர்த்திருத்தம் என்ற பெயரில் நாட்டிற்குள் கொண்டு வர அனுமதிக்க முடியாது என கூறிய பேராயர் ,வெளிநாட்டு பணத்துக்கு அடிமையாகி நாட்டின் கலாசாரத்தை சீரழிக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் நினைத்த அனைத்தையும் செய்ய நாம் அதிகாரத்தை வழங்கவில்லை எனவும் கூறினார்.



