NPP பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார என் முகத்தில் கசிப்பு அடங்கிய பக்கெட்டினால் தாக்கினார் !

NPP பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார என் முகத்தில் கசிப்பு அடங்கிய பக்கெட்டினால் தாக்கினார் என அவரது தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் கட்சி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர், தனது மாமனாரின் நிலத்தில் கஞ்சா பயிரிட்டமை தொடர்பில் சோதனை நடத்தியதாக கூறப்படும் காவல்துறை அதிகாரியைத் தாக்கியுள்ளதாக கூறப்பட்டது..
தற்போது வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவரும் குறித்த பொலிஸ் அதிகாரி.
பணியில் இருந்து திரும்பி வரும்போது ஒரு கடைக்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார அவரது வாகனத்தை எனது பைக்குக்கு குறுக்கே நிறுத்தினார்.
வாகனத்தில் இருந்து இறங்கி வந்து, “நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன்” என்றார். நீங்கள் சந்திக்க விரும்பினால், சந்திப்போம்” என்று நான் கூறினேன்.பின்னர் தனது மோட்டார் சைக்கிளின் சாவியை வலுக்கட்டாயமாக எடுத்ததார்.
நான் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்க முற்பட்ட போது “NPP பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார என் முகத்தில் கசிப்பு அடங்கிய பக்கெட்டினால் தாக்கினார்.அதன் அமிலத்தன்மை காரணமாக சிறிது நேரம் எனக்கு கண்கள் குருடாகிவிட்டன.”உனக்கு பொலிஸுக்கும் செல்லமுடியாத வகையிலும், வைத்தியசாலைக்கும் செல்ல முடியாத வகையிலும் உனக்கு என்ன செய்கிறேன் பார்” என பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமாரவும் அவரோடு வந்தவர்கள் என்னை தாக்கினார்கள்.
அதன் பின்னர் அங்கே இருந்து தப்பிவந்து நான் எனது மனைவிக்கு அழைப்பு எடுத்து விடயத்தை கூறிவிட்டு வைத்தியசாலையில் அனுமதியானேன் என அவர் கூறினார்.



