News
தொலைபேசி உரையாடல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து ஒரு குழுவினரால்19 வயது இளைஞர் கொலை

செட்டிக்குளம் – வீரபுரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 19 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தொலைபேசி உரையாடல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, ஒரு குழுவினரால் குறித்த இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறித்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொலைத் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்றுமொரு சந்தேக நபரைக் கைது செய்ய செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகள் நடத்தி வருகின்றன.



