News
அநுரவுக்கு வாக்களிப்பது ஹலால் ! திருடர்களுக்கு வாக்களிப்பது ஹராம் !!
உங்களால் திருட்டை நிறுத்த முடியாவிட்டால் திருட்டை நிறுத்துபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அனுர குமார திஸாநாயக குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தன்னிடம் அமைச்சரவை பத்திரத்தை கொடுத்து தன்னால் திருட்டை நிறுத்த முடியவில்லை நீங்கள் இதனை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என கூறினர்.திருட்டை நிறுத்த முடியாவிட்டால் நிறுத்த முடியுமானவர்களுக்கு உதவி செய்யுமாறு உங்கள் மார்க்கம் சொல்கிறது.
உங்களால் திருட்டை நிறுத்த முடியாது ஆனால் திருடர்களுக்கு வாக்களித்தால் அது ஹராம்.அதனால் திருட்டை நிறுத்துபவர்களுக்கு உதவி செய்யவேண்டும் அது தான் ஹலால் என அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் பார்த்தால் நீங்கள் தேசிக மக்கள் சக்திக்கே வாக்களிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.