சில காலங்களுக்கு முன்னே வழக்கொழிந்து போன ebuddy messenger இல் Profile உருவாக்கும் பாடமே தவறுதாலாக ஆபாச இணையத்தின் பெயரில் அச்சிடப்பட்டு களேபரம் ஆனது

By : Ziyad aia
Buddy. Net எனற இணைய தவறுக்கு விளக்கம் சொல்ல வந்தவர்கள் அது தவறி இடம்பெற்றதாக சொல்கிறார்களே அன்றி சரியான இணைய தளம் எதுவென விளக்கவில்லை.
ஏனென்றால் அது இன்னும் அசிங்கமா போகும். ஏனென்றால் அந்த இணையத்தளம் இப்ப இல்லை. அது ebuddy. Com
அந்த ஆறாமாண்டு ஆங்கில பாடப் பக்கம் முழுவதுமே e-buddy இல் Profile உருவாக்குவது பற்றியே விளக்குகிறது.
eBuddy என்பது 2000-களின் தொடக்கத்தில் இணைய உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு Multi-messenger சேவையாகும்.
இன்றைய WhatsApp காலத்திற்கு முன்பு, மக்கள் வெவ்வேறு நிறுவனங்களின் Chatகளை பயன்படுத்திய போது, அவை அனைத்தையும் ஒரே இடத்தில் இணைத்த பெருமை இதையே சாரும்.
அந்தக் காலத்தில் Yahoo Messenger, MSN (Windows Live), Google Talk (Gtalk), பின்னாளில் வந்த Facebook Chat மற்றும் ICQ எனப் பல மெசஞ்சர்கள் இருந்தன. ஒவ்வொரு நண்பரும் ஒவ்வொரு தளத்தில் இருப்பார்கள். eBuddy மென்பொருளைப் பயன்படுத்தினால், நீங்கள் இந்த எல்லா கணக்குகளையும் ஒரே App அல்லது இணையதளத்தில் Login செய்து கொள்ள முடியும். இதனால் ஒவ்வொரு மென்பொருளையும் தனித்தனியாக Install செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
இந்த ebuddy ஒரு Web-based Service: கணினியில் எந்த மென்பொருளையும் தரவிறக்கம் செய்யாமலேயே, Browser மூலமாகவே அனைத்து நண்பர்களுடனும் Chat செய்ய முடிந்தது. இது அலுவலகம் அல்லது பாடசாலை கணினிகளில் பயன்படுத்த மிகவும் வசதியாக இருந்தது.
eBuddy Mobile: ஸ்மார்ட்போன்கள் வருவதற்கு முன்பே, ஜாவா (Java – .jar) போன்களில் இயங்கக்கூடிய வகையில் இது ஒரு செயலியை வைத்திருந்தது. இது Nokia, Sony Ericsson போன்ற பழைய போன்களில் மிகவும் பிரபலம்.
*பின்னாளில் WhatsApp-க்கு போட்டியாக ‘eBuddy XMS’ என்ற பிரத்யேக மெசேஜிங் சேவையையும் அவர்கள் அறிமுகப்படுத்தினர்.
WhatsApp மற்றும் Facebook Messenger போன்ற செயலிகள் தனித்தனியாகவும் வேகமாகவும் வளரத் தொடங்கியபோது, பல Chatகளை ஒன்றிணைக்கும் தேவை குறையத் தொடங்கியது.
2013 ஆம் ஆண்டில், Booking. com நிறுவனம் eBuddy-ஐ வாங்கியது. அதன் பிறகு, அதன் பழைய Multi Messaging சேவைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன.
தற்போதைய நிலை (2026 நிலவரம்)
தற்போது பழைய பாணியிலான eBuddy மெசஞ்சர் பயன்பாட்டில் இல்லை. (கடல்லயே இல்லையாம்.)
ஆக இப்ப போட்டு அடிக்க வேண்டியது அந்த ebuddy. com இல்லாததால வெறும் Buddy. Net ஐ போட்டவனை அல்ல.
🤦 மாறாக இவ்வளவு கல்வி சார் அறிவாளிகள் சேர்ந்து ஒரு இணைய தளம் 10 ஆண்டுகளுக்கு முன்பே முடக்கப்பட்டது தெரியாமல் Profile உருவாக்க வழிகாட்டியதற்கு.
🤦 Digital உலகம் எவ்வளவோ Update ஆன பின்பும் 2026 New Module என்ற பெயர்ல 2000ஆம் ஆண்டு Old Syllabusஐ கொண்டு வந்தவர்களை.
🤦 குழந்தைகளை Smart phone பாவனையிலிருந்து தடுக்க சட்டம் கொண்டுவருவதாக கூறிக்கொண்டு இவ்வாறு Grade 6இல் Chat Profile உருவாக்க வழிகாட்டுவது நகை முறண்.
ஆக இது வெறும் ஒரு இணைய தளத்தின் பெயர் தவறாக பிரசுரிக்கப்பட்ட பிரச்சினை அல்ல. ஒரு பாடப் பக்கமே Update ஆகாமல் அச்சடிக்கப்பட்டுள்ளது.
நம்ம நாட்டுல ஒரு துறைல PhD வரை படித்து முடித்து இருந்தாலும் அடுத்த துறைகளில் அடிப்படை அறிவு கூட பலருக்கு இருப்பதில்லை.
எத்துறையில் கற்றாலும் தகவல் தொழில்நுட்ப துறையில் (ICT) அடிப்படை அறிவு அவசியமானது.
By: ziyad aia



