News
2500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்

தகுதியுள்ள மருந்தாளர்களை (Pharmacists) முழுநேர சேவையில் ஈடுபடுத்த முடியாத காரணத்தினால், நாடு முழுவதும் உள்ள 2500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன.
மருந்தகம் திறந்திருக்கும் முழு நேரமும் தகுதியுள்ள மருந்தாளர் ஒருவர் பணியில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை இந்த ஆண்டு முதல் கடுமையாக அமல்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) தீர்மானித்துள்ளது.
இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்ய முடியாத மருந்தகங்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான உரிமத்தைப் புதுப்பிக்காதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



