நாட்டின் ஒட்டுமொத்தப் பெண்களை வீதிக்கு இறக்கக்கூடத் தயங்கப் போவதில்லை !

கல்விச் சீர்திருத்தங்கள் மீதான விமர்சனங்கள் ஒரு அரசியல் சதி – சமன்மலி குணசிங்க
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6-ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தொகுதி (Module) தொடர்பான கருத்துக்கள் வெறும் அரசியல் சதி என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
“இந்தச் செயல்முறை மூலம் இந்த நாட்டு பிள்ளைகளுக்கோ அல்லது நாட்டுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரு குழுவினர் குறுகிய நோக்கங்களுக்காக இதனைத் திரிபுபடுத்திக் காட்ட முயற்சிக்கின்றனர்.
குறிப்பாக, இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரதமரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் தரம் குறைந்த விமர்சனங்களையும் அறிக்கைகளையும் நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு நிராகரிக்கிறோம்.”
எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்படும் இந்தத் தவறான பிரச்சாரங்களுக்கு எதிராக நாட்டின் ஒட்டுமொத்தப் பெண் சமூகத்தையும் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், அவர்களை வீதிக்கு இறக்கக்கூடத் தயங்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் சாதகமான மாற்றங்களை அரசியல் லாபத்திற்காக சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்படும் தவறான பிரச்சாரங்களுக்கு எதிராக நாட்டின் எதிராக நாட்டின் ஒட்டுமொத்தப் பெண் வீதிக்கு இறக்கக்கூடத் தயங்கப் போவதில்லை !


