வீதி விபத்தில் வயோதிப தாய் பலி!
வீதி விபத்தில் வயோதிப தாய் பலி!
மாவடிவேம்பில் சம்பவம்.
(ஏறாவூர் நஸீர் -ISD)
மட்டக்களப்பு மாவட்ட சந்திவெளி பொலிஸ் பிரிவு மாவடிவேம்பு பிரதான வீதியில் நேற்று (30/08) மாலை இடம்பெற்ற வீதிவிபத்தில் சித்தாண்டியை சேர்ந்த வயோதிபத் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சித்தாண்டி, சிறுவர் இல்லமொன்றில் சமையல்காரியாக தொழில் செய்து வந்த கனகசபை துளசிமணி (66) என்ற தாய், நேற்று மாலை மாவடிவேம்பு, மணிவாசகர் வீதியிலிருக்கும் தனது பேத்தியின் வீடு சென்று, தனது வீடுநோக்கி செல்ல பிரதான வீதியை கடந்து செல்லும் போது, செங்கலடியிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த சிறிய ரக லொறியொன்றினால் மோதுண்டதால் தலைப்பகுதி பலமாக தாக்குண்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
பிரேதம் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு ,கொண்டு செல்லப்பட்டதும் , சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று, சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் ,விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்..
விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டு, இன்றைய தினம்(31/08) கௌரவ நீதிபதியிடம் முன்னிலைப்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று ( 31/08) சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் முன்னெடுக்கின்றனர்.