News
புதிய கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரி, நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் !!

புதிய கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரி, நுவரெலியா பிரதேசத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் (20) ஆம் திகதி நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்ச்சைக்குரிய ஆங்கில கற்றல் தொகுதி (English learning module) தவிர்ந்த, ஏனைய பாடங்களுக்குரிய கற்றல் தொகுதிகளை நேரத்தை வீணடிக்காது உடனடியாக மாணவர்களுக்கு கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், பாடசாலை மாணவர்களையும் வீதியில் இறக்கி பாரிய போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்த பெற்றோர்கள், போராட்டத்தின் போது அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.


