News

பிரபாகரனின் இல்லத்தை புனரமைக்க தீர்மானம் நிறைவேற்றம்

வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்தைப் புனரமைத்து அவரது சகோதரியிடம் ஒப்படைக்க வல்வெட்டித்துறை நகரசபையில் தீர்மானம்

எல்.டி.டி.ஈ அமைப்பின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள இல்லத்தை முழுமையாகப் புனரமைத்து, அதனை அவரது சகோதரியிடம் ஒப்படைக்க வேண்டும் என வல்வெட்டித்துறை நகரசபையில் முன்வைக்கப்பட்ட யோசனை கடந்த 02ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த யோசனையை வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சபையில் முன்வைத்தார்.

இந்த யோசனையை முன்மொழிந்து உரையாற்றிய அவர், “உலகிலுள்ள பல தலைவர்களின் இல்லங்கள் இவ்வாறே புனரமைக்கப்பட்டு எதிர்கால சந்ததியினர் பார்வையிடுவதற்காகப் பாதுகாப்படுகின்றன. எனவே, பிரபாகரனின் இல்லம் எனக் கூறப்படும் அந்த வீட்டையும் முழுமையாகப் புனரமைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

அவ்வீட்டின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பைக் கருத்திற்கொண்டு, அதனைப் புனரமைத்த பின்னர் பிரபாகரனின் சகோதரியிடம் ஒப்படைப்பது மிகவும் பொருத்தமான செயலாகும் என எம்.கே. சிவாஜிலிங்கம் முன்வைத்த இந்த யோசனைக்குச் சபையின் ஏகமனதான ஆதரவு கிடைத்துள்ளது.

Recent Articles

Back to top button