
78 ஆவது சுதந்திர தினத்தை நாம் இன்று கொண்டாடுகிறோம். 133 வருட கால மிகவும் கொடூரமான நெருக்கடி நிறைந்த கொள்ளைக் கூட்டத்தின் காலனித்துவ ஆட்சியின் பின்னர் 1948 இல் சுதந்திரம் கிடைத்த வருடமாகும். அதே போன்று பல நூற்றாண்டுகள் காலனித்துவத்திற்கு எதிராக எமது மூதாதையினர் தமது இரத்தம் கண்ணீர் வியர்வையை இந்த தாய்நாட்டிற்காக அர்ப்பணித்தார்கள். என 78 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அன்று எமது மூதாதையினர் திடஉறுதியுடனான நம்பிக்கையுடனான போராட்டத்தின் பலனாக எமக்கே தனித்துவமான இறைமையின் உரிமை கிடைத்தது. 1948 என்பது பல்வேறுபட்ட அர்ப்பணிப்புகள் செய்த எமது படையினரின் மற்றும் மூதாதையினரின் வெற்றியின் மற்றும் வீரத்தின் அடையாளமான வருடமாகும். குறிப்பாக நாம் வாழ்வில் பல்வேறு நிலைகளுக்கு முகங்கொடுப்பதை அனைவரும் அறிவோம்.பலர் தங்களுக்காக போராடுகின்றனர். போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
அது அரிதான விடயமன்றி அது பொதுவான விடயமாகும். ஆனால் யாராவது தாய்நாட்டுக்காக அதே போன்று எதிர்கால சந்ததிக்காக தமது உயிரை அர்ப்பணித்து போராடுவதாக இருந்தால் அவர்கள் உண்மையில் வீரர்களாக மாறுவதை தடுக்க முடியாது. அவர்கள் மிகவும் உயர்வான பணியில் ஈடுபடுகின்றனர்.
நாம் இன்று கால்பதித்துள்ள இந்த பூமி தாய்நாட்டிற்காக போராடிய எமது மக்களின் எதிர்காலம் மற்றும் சுபீட்சத்திற்காக போராடிய எமது மூதாதையினர், எமது சகோதர சகோதரிகளின் இரத்தம்,கண்ணீர் மற்றும் வியர்வையினால் இந்த பூமி ஈரமாகியுள்ளது. அவர்கள் எமது இதயங்களில் வீரத்தின் உயர்ந்த இடத்தில் குடிகொண்டுள்ளனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
எனவே இன்றைய தினத்தில் குறிப்பாக எமது தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் மக்களின் உயர்ந்த சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களுக்கு எமது மரியாதையையும் கௌரவத்தையும் அளிக்க வேண்டும்.நாம் சுதந்திரத்திற்குப் பின்னர் 78 வருடங்கள் பயணித்துள்ளோம். ஆனால் எமது சுதந்திரத்தின் மிக முக்கியமான பணி சுதந்திரம் முழுமையடைவது நாம் எந்தளவு பொருளாதார ரீதியில் எந்தளவு சுதந்திரம் பெறுகிறோம் என்ற காரணியின் அடிப்படையிலே என நான் கருதுகிறேன்.
பூரணமான சுதந்திரம் தொடர்பான போராட்டம் இன்னும் இருப்பதாக நான் கருதுகிறேன். அந்தப் போராட்டம் எமக்குள்ளும் உங்களுக்குள்ளும் இருப்பதாக நான் நினைக்கிறேன். குறிப்பாக இவ்வருட சுதந்திர தினத்தின் தொனிப் பொருள் ‘இலங்கையை கட்டியெழுப்புவோம் ‘ என்பதாகும். நாம் இலங்கையின் சுயாதீனத்தன்மை, இறைமை,எமது சுதந்திரம் ஆகிய தூண்களின் மேல் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.
அதனை மீளக் கட்டியெழுப்புகையில் எமது தாத்பரியம் என்னவாக இருக்க வேண்டும். நாம் மிகவும் உயர்ந்த வரலாற்றைக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எமது மூதாதையினர் அந்தக் காலத்திற்கு உகந்த வகையில் அந்தக் காலப்பகுதியின் இருப்பிற்கு ஏற்றவாறு மிக உயர்ந்த தொழில்நுட்ப அறிவைக் கொண்டிருந்ததை எமது வரலாற்று ரீதியான தகவல்கள் எமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. நாம் பெருமை மிக்க வரலாற்றை கொண்டுள்ள தேசமாகும்.
அதேபோன்று அன்மைக்கால வரலாற்றில் நாம் ஒதுக்கவேண்டிய பல விடயங்கள் உள்ளதோடு நாம் உள்வாங்கவேண்டிய பெருமளவான விடயங்களும் உள்ளன. அதனால் இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பாதை தாய்நாட்டுடனான பிரிக்கமுடியாத தொடர்புகளாகும். எமது தாய்நாட்டை கட்டியெழுப்புகையில் வரலாற்றினால் வழங்கியுள்ள முக்கிய தாத்பரியத்தை இந்த பூமியில் மீள ஸ்தாபிப்பதற்கான பாதையே நாம் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான பாதையாகத் தெரிவு செய்யப்படும்.
அது வெறுமனே தாய்நாட்டின் வேர்களை அழிக்கும் தேசத்தின் சாரத்தை ஒழிக்கும் பொருளாதார மார்க்கமல்ல. எமது தாய்நாட்டினதும் எமது தேசத்தினதும் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் நவீன இலங்கையொன்றை கட்டியெழுப்பும் பாதைக்கு நாம் பிரவேசிக்க வேண்டும்.
சுதந்திரத்தின் பின்னரான 78 வருடங்களில் வெற்றி தோல்வி இரண்டும் உள்ளது. நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது. நாம் ஒருபோதும் தீயவற்றை ஒதுக்க தயங்க மாட்டோம். அதேபோன்று ஒருபோதும் நல்லவற்றை உள்வாங்குவதற்கு அஞ்சப் போவதில்லை. அதனால் கடந்த கால செழிப்பான விடயங்களின் அடிப்படையில் இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்பும் பொறுப்பு எமக்கும் உங்களுக்கும் இருப்பதாக நம்புகிறேன்.
நாம் எவ்வாறு கட்டியெழுப்பப்போகிறோம்? முதலில் நாம் எம்மிடமுள்ள சாத்தியங்கள்,திறமைகள்,பலங்களை வரிசைப்படுத்தில் எம் வசமுள்ள பிரதான பலம் எதுவாக இருக்கும்?நாம் பெரும் சமுத்திர வலயத்திற்கு உரித்துடையவர்கள் என்று கூறலாம். சிறந்த காலநிலை வலயத்தில் அமைந்துள்ளோம் என்று கூறலாம். இயற்கை வளங்களினால் போசிக்கப்ட்டுள்ளதாக எமக்கு கூற முடியும்



