News

2025 இல் 142 புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன ; பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

கடந்த 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாச் சபையின் அங்கீகாரத்துடன் 142 புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களில் ஹோட்டல் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் உணவக அனுமதிப்பத்திரங்கள் உள்ளடங்குகின்றன.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button