News
நாளை (பெப்ரவரி 09) முதல் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு ..

நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய கட்டணத் திருத்தத்தின்படி, கடிதம் ஒன்றுக்கான குறைந்தபட்ச முத்திரை கட்டணம் 70 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பதிவுத் தபால் கட்டணங்களிலும் இவ்வாறு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் நிலவிய குறைந்தபட்ச தபால் கட்டணம் 50 ரூபாவாகும் என்பதுடன், இந்த கட்டண அதிகரிப்பு 40 சதவீதமாகும் (40%).



