News
ஈமானிய்யா அரபுக் கல்லூரியின் 85 மௌலவிகளுக்கான 4-வது பட்டமளிப்பு விழாவில் விஷேட விருந்தினராக நாமல் ராஜபக்ஷ பங்கேற்பு.

கம்பஹா திஹாரிய ஈமானிய்யா அரபுக் கல்லூரியின் 85 மௌலவிகளுக்கான 4-வது பட்டமளிப்பு விழா இன்று அக்கல்லூரியின் அதிபர் மௌலவி ஸைஃபுல்லாஹ் நிழாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வி முஃப்தி அவர்களின் பிரதான பங்கேற்புடனும், அஷ்-ஷைக் அம்ஹர் ஹகம் தீனி மௌலவி உள்ளிட்ட உலமாக்களின் பங்குபற்றலுடனும் இந்நிகழ்வு இனிதே இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் விஷேட விருந்தினராக நாமல் ராஜபக்ஷ பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



