News
இன்று லண்டன் பயணமாகும் நாமல் ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் உரையாற்றுகிறார்…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பிப்ரவரி 25ஆம் திகதி பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் மாணவர் சங்கத்தில் உரையாற்றவுள்ளார்.
இன்று லண்டன் பயணமாகும் நாமல் ராஜபக்ஷ அங்கு இங்கிலாந்து வாழ் இலங்கையர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Oxford Union மற்றும் கேம்பிரிட்ஜ் Cambridge Union ஆகிய மாணவர் சங்கங்களில் உரையாற்றவுள்ளமைக்கு எதிராக பிரித்தானியா வாழ் தமிழ் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து கடும் கண்டனத்தை வெளியிட்ட நிலையில் Cambridge பல்கலைகழகம் நாமலின் உரையை ரத்து செய்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.



