News

இலங்கையில் தனிநபர் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு ரூ. 16,730 அவசியம் ; தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

கொழும்பில் வசிப்பவர்களுக்கு ரூ. 18,000 அவசியம் – தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

இந்த ஆண்டின் ஆரம்ப மாத நிலவரப்படி, இலங்கையில் தனிநபர் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு ரூ. 16,730 அவசியமென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒரு நபர் வறுமைக் கோட்டிற்கு மேல் வாழ்வதற்கு, 2026 ஜனவரி மாத நிலவரப்படி ரூ. 18,044 தேவைப்படுவதாக அத்திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வறுமைக் கோட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, மிகக்குறைந்த பெறுமதி மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அது ரூ. 15,997 எனக் காட்டப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button