இஸ்ரேல் டெல் அவிவ் குடியிருப்புப் பகுதி மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்:

பெண் ஒருவர் பலி, டஜன் கணக்கானோர் காயம்
டெல் அவிவ் (Tel Aviv) நகரின் குடியிருப்புத் தொகுதி ஒன்றின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன், டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு ஈரான் ஏவிய ஏவுகணைகள் இஸ்ரேலின் மத்தியப் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களை நேரடியாகத் தாக்கியுள்ளன. இதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய அவசர சேவைப் பிரிவான மாகன் டேவிட் அடோம் (Magen David Adom) உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஈரான் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஏவுகணைத் தாக்குதலால் குறித்த குடியிருப்புப் பகுதியில் உள்ள கட்டிடங்களுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



