News

ரஃஸ் லஃப்பான் மற்றும் மெசயீத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் : கத்தார் எனர்ஜி நிறுவனம் LNG உற்பத்தியை நிறுத்தியது:

ஈரானிய ட்ரோன்கள் (ட்ரோன் தாக்குதல்கள்) ரஃஸ் லஃப்பான் (Ras Laffan) மற்றும் மெசயீத் (Mesaieed) ஆகிய தொழில்முறை நகரங்களில் உள்ள எரிசக்தி நிலையங்களைத் தாக்கியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின் அடிப்படையில் நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றான கத்தார் எனர்ஜி (Qatar Energy) நிறுவனம், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் அதன் துணைப் பொருட்களின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தற்போது அறிவித்துள்ளது.

Recent Articles

Back to top button