News

தலைமைத்துவ சர்வதேச பயிற்சியில் பங்கேற்ற இளம் இலங்கை பிரதிநிதிகள் நாடு திரும்பினர்

நிறுவன வளர்ச்சி மற்றும் சிறப்பிற்கான புதுமையான தலைமைத்துவம் என்ற தொனிப்பொருளில், இந்தியாவில் அமைந்துள்ள தேசிய தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு (NIESBUD) நிறுவனத்தில் கடந்த 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச தலைமைத்துவ பயிற்சி நெறியில் பங்கேற்றிருந்த இலங்கை பிரதிநிதிகள் நேற்று முன்தினம் (28) நாடு திரும்பினர்.

இந்த பயிற்சிநெறி இந்திய அரசின் ஏற்பாட்டில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் இணைப்பிலும், புது தில்லியின் உத்தர பிரதேஷ் பகுதியில் இடம்பெற்றது.

இப்பயிற்சியில் இலங்கையைச் சேர்ந்த 24 பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு, நிறுவன மேலாண்மை, புதுமை வழிநடத்தல், திறன் மேம்பாடு மற்றும் சிறு வணிக வளர்ச்சி தொடர்பான பல்வேறு தலைப்புகளில் சர்வதேச தரத்திலான கருத்தரங்குகளும் பயிற்சிகளும் பெற்றனர்.

பயிற்சிகள் நிறைவின் போது, தேசிய தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் NIESBUD நிறுவனத்தின் தலைமை பணிப்பாளர் நாயகம் கலாநிதி கலாநிதி பூனம் சிங்ஹா அவர்களால் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இலங்கையர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இப்பயிற்சியில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்து பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயிற்சியில் பங்கேற்றவர்களால், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ சந்தோஸ் ஜா அவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், இப்பயிற்சியில் ஶ்ரீ லங்கா பொதுஜண பெரமுன கட்சி சார்பில் இளைஞர் அமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினர் மொஹமட் முபீத் முன்தசிர் பங்கேற்றிருந்தார்.

Recent Articles

Back to top button