News

யுத்தம் தீவிரமடைந்தால் எரிவாயுவை ஓடர் செய்வதில் சிக்கல் – லிட்ரோ, லாஃப்ஸ் நிறுவனங்கள் எச்சரிக்கை

ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு அபாயம் !

ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்தால், இலங்கைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்வதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என லிட்ரோ (Litro) மற்றும் லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக எரிவாயு விலை அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளதாகவும் அந்த நிறுவனங்களின் பேச்சாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, மாற்று வழிகள் ஊடாக நாட்டுக்குத் தேவையான எரிவாயுவை ஓடர் செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமை:

• லாஃப்ஸ் நிறுவனம்: தற்போது ஓடர் செய்யப்பட்ட எரிவாயு கையிருப்புகள் நாட்டுக்கு கிடைத்துள்ளன என்றும், அவற்றின் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

• தட்டுப்பாடு: எவ்வாறாயினும், நாட்டின் சில பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Recent Articles

Back to top button