News

நிலக்கரி இறக்குமதியால் 848 கோடி ரூபாய் நஷ்டம்: பாராளுமன்றக் குழுவில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

சர்ச்சைக்குரிய ஒன்பது நிலக்கரி கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி காரணமாக, சுமார் 848 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி குறித்த பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பான முக்கிய விடயங்கள் வருமாறு:

• மின் உற்பத்தி பாதிப்பு: இந்த நிலக்கரியைப் பயன்படுத்தி எந்தவொரு கப்பல் மூலமும் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

• அதிகப்படியான சாம்பல்: இந்த நிலக்கரியில் சாம்பல் சதவீதம் (Ash percentage) 102 சதவீதத்தினால் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

• தண்டப்பணம் வசூலிக்கப்படாமை: தரம் குறைந்த நிலக்கரியை வழங்கியதற்காக இதுவரை எவ்வித தண்டப்பணமும் வசூலிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தினார். இது தொடர்பாக மின்னஞ்சல் மூலம் மாத்திரமே நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளதால், உடனடியாக தண்டப்பணத்தை வசூலிக்குமாறு அவர் பரிந்துரைத்துள்ளார்.

• தொழில்நுட்ப அபாயம்: தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதால் நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரங்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர்கள் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

Recent Articles

Back to top button