News

“உலகப் போர் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படலாம்.”

கடற்படை மற்றும் விமானப் போக்குவரத்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகள் காரணமாக, தற்போது ஓடர் செய்யப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் வந்து சேருவதில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் காலப்பகுதியை நீடிப்பது தொடர்பான, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் ஆரம்பமான விவாதத்தின் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

“யுத்த நிலைமை காரணமாக கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாம் கோரியுள்ள அத்தியாவசிய சேவைகளில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்வரும் சில வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை. எனவே, அத்தியாவசிய சேவைகள் குறித்து நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.அவசரகால நிலையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல நாம் தீர்மானித்தது அதனாலேயே ஆகும். அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு முறையான திட்டமொன்றை நாம் தயாரித்துள்ளோம்.”

Recent Articles

Back to top button