UAE உள்ளிட்ட அரபு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலை கண்டித்த இலங்கை ஜனாதிபதி ; எமிரேட்ஸ் நியுஸ் ஏஜன்ஸி தகவல் ..

“ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பல அரபு நாடுகளை இலக்கு வைத்து ஈரான் நடத்திய நேரடித் தாக்குதல்களைக் கண்டித்து, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி கௌரவ அனுர குமார திசாநாயக்க, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மேதகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இன்று தொலைபேசி ஊடாக உரையாடினார்.
தமது நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இலங்கையின் ஆதரவையும் ஒற்றுமையையும் ஜனாதிபதி இதன்போது உறுதிப்படுத்தினார்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆதரவாக இலங்கையின் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியமைக்காக ஜனாதிபதி திசாநாயக்கவிற்கு அதிபர் அவர்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், மோதல்கள் விரிவடைவதைத் தவிர்க்கவும், பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பிற்கு ஏற்படும் பாரிய பாதிப்புகளைக் குறைக்கவும், இராணுவ ரீதியிலான மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.



