அமெரிக்க தூதுவராலயத்தின்இப்தார் நிகழ்வு ரத்து

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தூதரகம் இன்று (10) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இந்த நிகழ்விற்கான பிரதம அதிதியினால் இலங்கைக்கு பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையினாலேயே இந்த இப்தார் நிகழ்வு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதுவராலயம் தெரிவிக்கின்றது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தினால் எதிர்வரும் 12ஆம் திகதி இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவினால் யுத்தம் தொடரப்பட்டதை அடுத்து, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வினை பகிஷ்கரிக்குமாறு கடுமையாக வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையிலேயே அமெரிக்க தூதுவராலயத்தின் இப்தார் நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.



