News

பெற்றோல் 1 லீட்டருக்கு அரசு அறவிடும் 117 ரூபா வரியை நீக்கினால் 200 ரூபாவுக்கு பெற்றோலை வழங்க முடியும்

பெற்றோல் 1 லீட்டருக்கு அரசு அறவிடும் 117 ரூபா வரியை நீக்கினால் 200 ரூபாவுக்கு பெற்றோலை வழங்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வங்கும்புற குறிப்பிட்டார்.

மக்கள் கஷ்டத்தில் இருப்பதால் அரசு மக்கள் மீது சுமையை போடாமல் எரிபொருள் மீதான அசாதாரண வரிகளை நீக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

பெற்றோல் ஒரு லீட்டருக்கு 117 ரூபா வரி அறவிடப்படுவதாகவும், டீசல் ஒரு லீட்டருக்கு 100 ரூபா வரி அறவிடப்படுவதாகவும், மண்ணெண்ணெய் ஒரு லீட்டருக்கு 15 ரூபா வரி அறவிடப்படுவதாகவும் அவர் கூறினார்.

Recent Articles

Back to top button