News

பெப்ரவரி மாதத்தில் 9,358 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு முதலீடுகள் சந்தையிலிருந்து வெளியேற்றம் !

கொழும்பு பங்குச் சந்தையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் 9,358.49 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

பெப்ரவரி மாதத்திற்கான பங்குச் சந்தை அறிக்கையை சமர்ப்பித்து ‘அம்பியொன் செக்கியூரிட்டீஸ்’ (Ambeon Securities) நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த மாதத்தின் இரண்டு வர்த்தக நாட்களைத் தவிர, ஏனைய அனைத்து நாட்களிலும் வெளிநாட்டு முதலீடுகள் இவ்வாறு வெளியேறியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, 2026ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் பெப்ரவரி இறுதி வரை வெளியேறியுள்ள மொத்த வெளிநாட்டு முதலீடுகளின் பெறுமதி 16,145.75 மில்லியன் ரூபாய்களாகும்.

இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் சுட்டெண்கள் தொடர்ந்தும் உயர்வதைக் காட்டும் வகையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 0.22 சதவீதத்தாலும், ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் ஸ்ரீலங்கா 20 (S&P SL20) சுட்டெண் 0.59 சதவீதத்தாலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.

அந்த மாதத்தில் இடம்பெற்ற சாதகமான நிகழ்வுகள் இந்த அதிகரிப்புக்குக் காரணமாகியுள்ளன. பெப்ரவரி மாதத்தில் பட்டியலிடப்பட்ட 7 நிறுவனத் துறைகளின் பங்கு விலைகள் அதிகரித்துள்ளதுடன், 13 துறைகளின் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

“இவற்றுள் வர்த்தக மற்றும் தொழில்முறை சேவைத் துறை 30.11 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதேபோல், சில்லறை விற்பனைத் துறை அந்த மாதத்தில் 6.7 சதவீத பாரிய வீழ்ச்சியைக் காட்டியுள்ளது” என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

“பெப்ரவரி மாதத்தில் தினசரி (Turnover) 5,616 மில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், ஜனவரி மாதத்தில் பதிவான 7,095 மில்லியன் ரூபாய் தினசரி Turnover ஒப்பிடும்போது, இது 21 சதவீத வீழ்ச்சியாகும். இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சராசரி தினசரி Turnover 6,356 மில்லியன் ரூபாய்களாகும்” என அம்பியொன் செக்கியூரிட்டீஸ் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Recent Articles

Back to top button