News

ஈரானிடமிருந்து இஸ்ரேல் மீது முதல்முறையாக செஜில் (Sejjil) ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் செஜில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த மோதலில் தாங்கள் செஜில் ஏவுகணையைப் பயன்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவென ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) இன்று (15) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் மத்திய இஸ்ரேலில் குறைந்தது இருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் இந்த நடவடிக்கைக்கு ‘Operation True Promise-4’ எனப் பெயரிட்டுள்ளதுடன், இதன் கீழ் அவர்கள் கைபர் ஷெக்கன் (Khaibar Shekan), காதர் (Ghadr), எமாத் (Emad) மற்றும் கோரம்ஷார் (Khorramshahr) ஆகிய ஏவுகணைகளையும் பயன்படுத்தியுள்ளனர்.

Recent Articles

Back to top button