News
“பல எரிபொருள் நிலையங்களில் கையிருப்பு தீர்ந்தது!”

நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் QR முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (15) காலை முதலே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்தமையினால், பல நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு வேகமாகத் தீர்ந்துள்ளதுடன், அது தொடர்பான அறிவித்தல் பலகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், புதிய எரிபொருள் கையிருப்புகள் கிடைத்தவுடன் விநியோக நடவடிக்கைகள் வழமை போல் முன்னெடுக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



